settings icon
share icon
கேள்வி

பிசாசு பிடித்தல் / பிசாசு ஆட்கொள்ளுதல் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்


சிலர் பிசாசினால் பிடிக்கப்பட்டதை அல்லது மேற்கொள்ளப்பட்டதைக் குறித்து வேதாகமம் சில உதாரணங்களைக் கொடுக்கின்றது. இந்த உதாரணங்களிலிருந்து பிசாசின் ஆளுகையில் இருப்பதன் அறிகுறி மற்றும் பிசாசு ஒருவரை எப்படி பிடிக்கிறது என்பதையும் நாம் அறிந்துக்கொள்ளலாம். இதோ சில வேதப்பகுதிகள்: மத்தேயு 9:32-33; 12:22; 17:18; மாற்கு 5:1-20; 7:26-30; லூக்கா 4:33-36; 22:3; அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16-18. இந்தப் வேதப்பகுதிகளில் பகுதிகளில் பிசாசுப்பிடிதிருப்பது சில உடல் நலிவு அல்லது நோய்களை ஏற்படுத்துவதை கண்டுகொள்ளலாம். அதாவது பேசமுடியாமலிருப்பது, வலிப்புநோய், கண்பார்வை இல்லாதிருப்பது போன்ற சரீரப்பிரகாரமான நோய்களை உண்டாக்குகின்றது. வேறு சிலரை தீமையைச் செய்ய தூண்டுகிறது, இதற்கு யூதாஸ் ஒரு நல்ல உதாரணம். அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16-18ல், ஒரு ஆவி அடிமைப்பெண்ணுக்கு தன்னுடைய அறிவுக்கு எட்டாத சில காரியங்களை அறியக்கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது. கதரேனில் பிசாசு பிடித்த மனிதன், அநேக பிசாசுகளை உடையவனாயிருந்தான் (லேகியோன்), அவனுக்கு அசுர பலமிருந்தது என்றும் அவன் நிர்வாணியாய் கல்லறைகளில் குடியிருந்தான் என்றும் காண்கிறோம். சவுல் ராஜாவிற்கு மனசோர்வும், தாவீதைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமும் அதிகமாகி கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபோது, ஒரு அசுத்த ஆவியினால் அவன் அலைக்கழிக்கப்பட்டான் (1 சாமுவேல் 16:14-15; 18:10-11; 19:9-10).

இப்படி பலவிதமான அறிகுறிகள் பிசாசு பிடிக்கும்போது உண்டாகும். சரீரத்தில் சில குறைபாடுகள், ஒருவேலை அது உண்மையான நோயாக இல்லாமலிருக்கலாம், மனோபாவத்தில் மாற்றம், மனச்சோர்வு, இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலன், அடக்கமின்மை, சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தை, இயற்கையான முறையில் அறியமுடியாத தகவல்களை பகிர்ந்துக்கொள்வது போன்ற சில மாற்றங்கள் ஏற்படலாம். கவனிக்கவும், இவைகள் யாவும் அல்லது இது போன்ற நடத்தைகளுக்கு வேறு விளக்கங்களும் இருக்கலாம், ஆகையால் எல்லா மனச்சோர்வையும் வலிப்பையும் பிசாசு பிடித்ததற்கு அறிகுறியாக எண்ணிவிடக்கூடாது. மேற்கத்திய கலாச்சாரங்களில் ஜனங்களுடைய வாழ்க்கையில் பிசாசின் தொடர்பை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இந்த சரீரப்பிரகாரமான அல்லது உணர்ச்சிகள் சார்ந்த வித்தியாசங்களோடு, ஆவிக்குரிய காரியங்களில் பிசாசின் தாக்கத்தையும் ஒருவர் பார்க்கலாம். இது மன்னிக்காத தன்மையாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 2:10-11), இயேசுகிறிஸ்துவையும் அவருடைய மீட்பைக்குறித்த தவறான உபதேசங்களை நம்புகிறதாயிருக்கலாம் (2 கொரிந்தியர் 11: 3-4; 13-15; 1 தீமோத்தேயு 4:1-5; 1 யோவான் 4:1-3).

கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் பிசாசுகளின் தொடர்பு அல்லது தாக்கத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். அதாவது ஒரு விசுவாசி பிசாசின் தாக்கத்துள்ளாக்கப்படலாம் என்பதற்கு பேதுரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் (மத்தேயு 16:23). பிசாசின் அதீத ஆளுகைக்குள் இருக்கிற கிறிஸ்தவர்களை சிலர் “பூதாகாரப்படுதல்” (demonized) என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் பிசாசினால் பிடிக்கப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டும் தெளிவும் வேதவாக்கியங்களில் இல்லை. பெரும்பாலான வேதப்பண்டிதர்கள் கிறிஸ்தவர்கள் பிசாசுப் பிடித்தவர்களாக முடியாது என்கிறார்கள், ஏனென்றால் பரிசுத்த ஆவி அவர்களுக்குள் வாசம் செய்கிறார், அப்படி பரிசுத்த ஆவி பிசாசோடு தான் வாசம் செய்யும் இடத்தை பகிந்துக்கொள்ள மாட்டார் என்று விசுவாசிக்கின்றனர் (2 கொரிந்தியர் 1:22; 5:5; 1 கொரிந்தியர் 6:19).

ஒருவர் பிசாசுக்குத் தன்னை எப்படி திறந்து கொடுக்கிறார் என்பதைக் குறித்து நமக்குத் தெளிவாகக் கூறப்படவில்லை. யூதாசின் விஷயத்தில், அவன் தீமைக்கு தன் இருதயத்தைத் திறந்துக் கொடுத்தான் என்பது ஒருவேளை அவனுடைய பேராசைக்கூடக் காரணமாயிருக்கலாம் (யோவான் 12:6). ஒரு கெட்டபழக்கத்தை தன்னுடைய இருதயத்தை ஆளுகை செய்ய ஒருவர் இடங்கொடுத்தால் அது பிசாசு நுழைய ஏதுவாக மாறக்கூடும். மிஷினரிகளின் அனுபவத்தில், பிசாசு பிடித்தல் என்பது விக்கிரக ஆரானையோடும் மாயமந்திரஞ்சார்ந்த பொருட்களோடும் சம்மந்தப்பட்டது என்று கூறுகிறார்கள். வேதவாக்கியம் விக்கிரக ஆராதனையை பேய்களுக்கான ஆராதனை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றது (லேவியராகமம் 17:7; உபாகமம் 32:17; சங்கீதம் 106:37; 1 கொரிந்தியர் 10:20), ஆகவே விக்கிரகங்களை ஆராதிப்பது பிசாசு பிடித்தலுக்கு வழிவகுக்கும் என்பதில் ஆச்சரியப்பட வேண்டிய காரியம் அல்ல.

மேற்சொல்லப்பட்ட வேதவாக்கியங்களிலும் சில மிஷினரிகளின் அனுபவங்களிலும், அநேகர் தவறான பாவக்காரியங்களாலும், மாயமந்திரம் சார்ந்த காரியங்களினாலும் (தெரிந்தோ, தெரியாமலோ) தங்களுடைய வாழ்க்கையை பிசாசின் கிரியைகளுக்கு திறந்துக்கொடுக்கிறார்கள் என்று ஒரு முடிவுக்கு வரலாம். உதாரணங்களாக துன்மார்க்கம், குடி அல்லது போதை பழக்கம் ஒருவருடைய சுயநினைவை மாற்றலாம். முரட்டாட்டம், கசப்பு மற்றும் பலவிதமான ஆழ்நிலை கடந்து செல்கிற தியானங்களுக்கு வழிவகுக்கலாம்.

மேலும் ஒரு கருத்தும் இருக்கின்றது. அதாவது சாத்தானும் அவனுடைய சேனையும் கர்த்தர் அனுமதிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது (யோபு 1-2). இது இப்படியிருக்குமானால் சாத்தான் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதாக எண்ணி, தேவனுடைய நல்ல திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறான். யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்தது உட்பட பல காரியங்களில் தேவனுடைய நோக்கம் நிறைவேறியதைக் கண்டுகொள்ளலாம். சிலர் மாய மந்திரங்கள் போன்ற ஆரோக்கியமில்லாத காரியங்களில் நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். இது முட்டால்தனமானதும் வேதத்திற்கு புறம்பானதுமாகும். நாம் தேவனைத் தேடி, அவருடைய சர்வாயுதவர்கத்தை அணிந்துகொண்டு அவருடைய பெலத்தைச் சார்ந்துகொள்வோமானால், எந்த தீயவற்றிற்கும் நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை, தேவன் சகலத்தையும் ஆளுகிறார்.

English



முகப்பு பக்கம்

பிசாசு பிடித்தல் / பிசாசு ஆட்கொள்ளுதல் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries