settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் என்றால் என்ன?

பதில்


“ஆவியானவருக்கு விரோதமான தேவதூஷணம்” என்கிற எண்ணம் மாற்கு 3:22-30லும் மற்றும் மத்தேயு 12:22-32லும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு அப்பொழுதான் ஒரு அற்புதத்தை செய்திருந்தார். பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் இயேசுவினிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக பிசாசை அவனைவிட்டு துரத்தி இயேசு அவனைச் சொஸ்தமாக்கினார். இதை கண்ணாரக்கண்டவர்கள் நாம் காத்துக்கொண்டிருக்கிற வருகிறவாகிய மேசியா இவர்தானா என ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தார்கள். அதாவது ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். மேசியாவைக் குறித்த பேச்சை கேட்டவுடனே, ஒரு கூட்ட பரிசேயர்கள், அவர்களுடைய பேச்சையும் விசுவாசத்தையும் நிலைகுலைய செய்ய முற்பட்டார்கள்: “பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானே யல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்” (மத்தேயு 12:24).

இயேசு பரிசேயர்களுக்கு மறுமொழியாக தான் ஏன் சாத்தானுடைய வல்லமையைக்கொண்டு சொஸ்தமாக்கவில்லை என்கிற வாதப்பொருத்தமுடைய விவாதத்தை கொண்டு வந்தார் (மத்தேயு 12:25-29). பிறகுதான் இயேசு பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தேவதூஷணத்தைக் குறித்து பேசுகிறார்: “ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” (மத்தேயு 12:31-32).

“தேவதூஷணம்” என்னும் பதம் “செருக்குடன் எதிர்த்தல்’’ என்று கூறலாம். இந்த வார்த்தையை தேவனை சபிப்பது மற்றும் தேவனுடைய காரியங்களை மனதார கீழ்த்தரமாக பேசுதல் போன்ற செயல்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேலும் தீமையானதை தேவன் பேரில் சுமத்துவது அல்லது தேவனுடைய நல்ல காரியங்களை தீமைக்கு துல்லியமாக கணக்கிடுவதும் தான் இந்த தேவதூஷணத்தின் தனித்துவமாகும். இங்கே இந்த இடத்தில் கூறப்பட்டுள்ள தேவதூஷணம் ‘‘பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம்’’ ஆகும் (மத்தேயு 12:31). பரிசேயர்கள், இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இந்த அற்புதத்தை செய்திருக்க, அந்த மறுக்கமுடியாத சாட்சிகளை தங்களுடைய கண்களினால் பரிசேயர்கள் கண்டபின்பும், இயேசு ‘‘பெயல்சபூலினால்’’ கட்டப்பட்டிருக்கிறார் என்று துணிகரமாக சொன்னார்கள் (மத்தேயு 12:24). மாற்கு 3:30ல் இயேசு அவர்கள் என்ன செய்து பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் செய்தார்கள் என்று கூறுகிறார்: “இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.”

பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷணம் ஆவியானவர் நிரப்பப்படுவதற்கு பதிலாக பிசாசு பிடித்திருப்பதாக இயேசு கிறிஸ்துவை குற்றஞ்சாட்டினார்கள். இந்தத் தேவதூஷணமானது இன்று நகல் எடுக்க முடியாது. பரிசேயர்கள் வரலாற்றில் ஒரு தனித்துவமான தருணத்தில் இருந்தனர்: அவர்கள் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் கொண்டிருந்தனர், பரிசுத்த ஆவியானவர் தங்கள் இருதயங்களை கிளறிவிட்டு, தேவனுடைய குமாரன் அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார், அவர்கள் தங்கள் கண்களால் அவர் செய்த அற்புதங்களைக் கண்டார்கள். உலகின் வரலாற்றில் முன்னும் பின்னும் (மற்றும் ஒருபோதும்) தெய்வீக வெளிச்சம் இந்த அளவிற்கு மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை; இயேசு யார் என்று யாராவது அறிந்திருந்தால், அது பரிசேயர்களே. ஆயினும்கூட அவர்கள் தடையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தாலும், ஆதாரம் இருந்தபோதிலும், அவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை பிசாசுக்கு உரியதாகக் கருதினர். இயேசு அவர்களது வேண்டுமென்றே விரும்பிசெய்த குருட்டுத்தன்மையை மன்னிக்க முடியாத பாவம் என அறிவித்தார். பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவர்களின் தேவதூஷணம் அவர்கள் தேவனின் கிருபையை இறுதியாக நிராகரித்ததாகும். அவர்கள் தங்கள் வழியைச் நாசத்திற்கு நேராக, தேவன் அவர்களை நொறுக்குதலான அழிவுக்கு செல்லும்படி அனுப்பபோகிறார் என்பதாக இருந்தது.

பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக பரிசேயர்கள் கூறிய தேவதூஷணத்திற்கு எதிராக இயேசு: “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” (மத்தேயு 12:32) என்று கூறினார். அதாவது அவர்களுடைய பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை என்று வேறுவிதமாக கூறுகிறார். இப்போதும் இல்லை, நித்தியத்திலும் இல்லை. மாற்கு 3:29 இவ்வாறு கூறுகிறது, "ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்".

பரிசேயர்கள் கிறிஸ்துவை வெளிப்படையாக நிராகரித்தத்தின் உடனடி விளைவு (மற்றும் தேவன் அவர்களை நிராகரித்ததும்) அடுத்த அதிகாரத்தில் காணலாம். இயேசு, முதல் முறையாக, "அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்" (மத்தேயு 13:3; மாற்கு 4:2). இயேசுவின் தனது போதனை முறையை மாற்றியதும் சீடர்கள் குழம்பிப்போனார்கள், பிறகு ஏன் இயேசு உவமைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை விளக்கினார்: “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்" (மத்தேயு 13:11, 13). யூத தலைவர்களின் அதிகாரபூர்வமான கண்டனத்தின் நேரடி விளைவாக இயேசு உவமைகள் மற்றும் உருவகங்கள் மூலம் சத்தியத்தை அவர்கள் அறியக்கூடாதபடி மறைத்துப்போட்டார்.

மறுபடியும், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷணத்தை இன்று செய்ய முடியாது, சிலர் முயற்சி செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமியில் இல்லை - அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்துள்ளார். இயேசு ஒரு அதிசயமான செயலைச் செய்தார் என்று கூறிவிட்டு, அதன்பிறகு பரிசுத்த ஆவிக்கு பதிலாக சாத்தானுக்கு அந்த வல்லமையை மட்டும் இடத்தை யாரும் தந்திருக்க முடியாது.

இன்று மன்னிக்க முடியாத பாவம் என்பது தொடர்ச்சியான அவிசுவாசத்தின் நிலை ஆகும். பரிசுத்த ஆவியானவர் தற்போது பாவம், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை கண்டித்து உணர்த்துகிறார் (யோவான் 16:8). அந்த உணர்த்துதலை எதிர்ப்பது, மனப்பூர்வமாக மனந்திரும்பாதவர்கள் இன்றும் ஆவியானவரை "தூஷித்துகொண்டுதான்" இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கும், அவிசுவாசத்தில் இறப்பதற்கும் பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை நிராகரிக்கிற ஒரு நபருக்கு மன்னிப்பு இல்லை. அது இந்த காலத்திலும் இனி வருங்காலத்திலும் மன்னிக்கப்படுவதில்லை.

தேவனுடைய அன்பு தெளிவாக உள்ளது: "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). தெரிவு தெளிவாக உள்ளது: "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்" (யோவான் 3:36).

English



முகப்பு பக்கம்

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries