settings icon
share icon
கேள்வி

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்ன?

பதில்


பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பதை தேவனுடைய ஆவியானவர் இரட்சிக்கப்படுகிற விசுவாசிகளை அவர்கள் இரட்சிக்கப்படுகிற அந்த தருணத்தில் அவர்களை கிறிஸ்துவோடும் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள மற்ற விசுவாசிகளோடும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஒன்றாக இணைத்து வைப்பது என்று விளக்கலாம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை யோவான்ஸ்நானகன் முன்னறிவித்தார் (மாற்கு1:8), இயேசுவும் தாம் பரமேறிச் செல்வதற்கு முன்பாக முன்னறிவித்தார்: “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார், நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” (அப்போஸ்தலர் 1:4). இந்த வாக்குத்தத்தம் பெந்தகோஸ்தே நாளிலே நிறைவேறியது (அப்போஸ்தலர் 2:1-4); முதல் முறையாக, பரிசுத்த ஆவியானவரை ஜனங்கள் தங்களுக்குள் நிரந்தரமாக தங்கி வாசம் கொள்ளும்படியாக பெற்றார்கள், சபையும் ஆரம்பமானது.

1 கொரிந்தியர் 12:12-13 வரையுள்ள வசனங்கள் தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்துக் கூறும் முக்கிய வேதவாக்கியங்கள் ஆகும்: “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும் சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரித்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீக்கப்பட்டோம்” (1 கொரிந்தியர் 12:13). கவனியங்கள்: எல்லாரும் ஆவியானவராலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்; எல்லா விசுவாசிகளும் ஞானஸ்நானத்தை பெற்றிருக்கிறோம் அதாவது இரட்சிப்பைப் பெற்றதுபோலவே எல்லாரும் இரட்சிப்புடன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் பெற்றிருக்கிறோம், இது ஒரு சிலருக்கு மட்டும் உண்டாகிற ஒரு விசேஷித்த அனுபவம் கிடையாது. ரோமர் 6:1-4ல் குறிப்பாக பிரத்யேக நிலையில் பரிசுத்த ஆவியைக் குறிப்பிடவில்லை, இது தேவனுக்கு முன்பாக விசுவாசிகளின் ஸ்தானத்தை 1 கொரிந்தியர் வேதபாகத்தில் குறிப்பிடப்பட்டதுபோல குறிப்பிடுகிறது: “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.

பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்”.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து நாம் உறுதியான நிலையில் புரிந்துகொள்வதற்கு பின்வரும் உண்மைகள் நமக்கு உதவும்: முதலாவதாக, 1 கொரிந்தியர் 12:13 தெளிவாக கூறுகிறது என்னவென்றால், எல்லாரும் ஒரே ஆவியை பாணம் பண்ணியது போல (பரிசுத்த ஆவி நமக்குள் வாசம் செய்வது) நாம் எல்லாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். இரண்டாவதாக, வேத வாக்கியங்களில் எந்த இடத்திலும் விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால், பரிசுத்த ஆவிக்குள், பரிசுத்த ஆவியோடு ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும் என்றோ அல்லது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாடவேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை. காரணம் இந்த அனுபவத்தை எல்லா விசுவாசிகளும் ஏற்கனவே இரட்சிக்கப்டும்போதே பெற்றிருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. மூன்றாவதாக, எபேசியர் 4:5 பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து கூறுகின்றதுபோல தோன்றுகிறது. இது இப்படியானால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது “ஒரே விசுவாசம்” மற்றும் “ஒரே பிதா” என்பது போல ஒவ்வொரு விசுவாசிக்குமுரிய மெய்யான காரியமாக இருக்கிறது.

முடிவுரையாக, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இரண்டு காரியங்களைச் செய்கிறது, 1) பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் கிறிஸ்துவின் சரீரத்தோடு நம்மை இணைக்கின்றது, மற்றும் 2) நாமும் கிறிஸ்துவோடுக்கூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறதை நமக்கு உணர்த்துகின்றது. அவருடைய சரீரத்தில் இருக்கிறோம் என்கிற காரியம் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் அவரோடுக்கூட எழுப்பப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம் (ரோமர் 6:4). 1 கொரிந்தியர் 12:13ன் பின்னணியில் நம்முடைய ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்தி இந்த சரீரம் சரியாய் இயங்குவதற்கு ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். எபேசியர் 4:5ன் பின்னணியில் ஒரே ஆவியின் ஞானஸ்நானம் என்பது சபையின் ஐக்கியத்திற்கு ஒரு அடித்தளமாக இருக்கின்றது. கிறிஸ்துவுடனேக்கூட அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் இணைந்திருக்கிற நாம் நமக்குள் வாசமாயிருக்கிற பாவத்திலிருந்து பிரிந்து புதிதான ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் (ரோமர் 6:1-10; கொலோசெயர் 2:12).

English



முகப்பு பக்கம்

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries