| |
பரலோகம் செல்வதற்கு இயேசு மாத்திரம்தானா வழி?
கேள்வி: பரலோகம் செல்வதற்கு இயேசு மாத்திரம்தானா வழி?
பதில்:
“அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே நான் பரலோகம் செல்வேன்” ஆகவே நான் சில தீய காரியங்கள் செய்வேன் ஆனாலும் நன்மையானவைகளை அதிகமாக செய்கிறபடியால், நான் பரலோகத்திற்கு செல்வேன். “ஆண்டவர் என்னை ஒருநாளும் நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது.” குழந்தைகளை கெடுப்பவர்கள், கொலைகாரர்கள் போன்ற மிகவும் மோசமானவர்கள் தான் நரகத்திற்கு செல்வார்கள்.”
இவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான கருத்துக்கள். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அத்தனையும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் விதைத்த தவறான எண்ணங்கள் இவைகள். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிறவர்களும் தேவனுக்கு பகைவர்கள் (I பேதுரு 5:8) சாத்தான் தன்னை எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (II கொரி. 11:14). ஆனால் தேவனுக்கு சொந்தமல்லாத மனதை, அவனது ஆளகைக்குள் வைத்துக் கொள்கிறான். பொல்லாத உலகத்தின் தேவனாகிய சாத்தான், தேவனை விசுவாசியாதவர்களின் மனதை குருடாக்கி, சுவிசேஷத்தின் மகிமையான ஒளி, அவர்கள் மேல் பிரகாசிக்க செய்யும்படி, தடைசெய்துவிடுகிறான். அவர்கள் தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை புரிந்து கொள்கிறதில்லை (II கொரி. 4:4). ஆண்டவர் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை. மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பது நம்ப முடியாத பொய்யாகும். எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. அது சிறிய வெள்ளை பொய்யாக கூட இருக்கலாம். எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால் பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை (ரோ. 3:23). பரலோகத்திற்கு செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பது என்பதினால் அல்ல, பாவஞ் செய்தால் பரலோகத்தை இழந்து போவோம். தேவனுடைய கிருபையினாலே இரட்சிக்கப்பட்டிருந்தால், அவர்கள் கிரியையினாலே அதை சுதந்தரிப்பதில்லை. இலவசமாக தகுதியில்லாதவர்களுக்கு, கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது கிருபையினாலே உண்டானது. ஆனால் கிரியையினாலே உண்டானது இல்லை (ரோ. 11:6). பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு, நாம் செய்யத்தக்க நன்மையானது ஒன்றுமில்லை (தீத்து. 3:5).
“தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு இடுக்கமான வாசல் வழியாக மாத்திரமே நுழைய முடியும். நரகத்திற்கு செல்லும் வழி விசாலமாயும், வாசல் அகலமாவும் இருக்கிறது. அதை அநேகர் தெரிந்து கொள்கிறார்கள் (மத்.7:13). பாவத்திலே வாழ்நது கொண்டு, நான் ஆண்டவர் மீது நம்பிக்கையாயிருக்கிறேன் என்பதை ஆண்டவர் மன்னிக்கமாட்டார். நீங்கள் உலகத்திலுள்ள மற்றவர்கள் போலவே வாழ்கிறீர்கள், பாவத்தில் நிறைந்து, ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய சாத்தானுக்கு கீழ்படிகிறீர்கள். தேவனுக்கு கீழ்படிய மறுக்கிறவர்களின் இருதயங்களிலே, இந்த ஆவியே கிரியை செய்கிறது (எபேசி. 2:2).
ஆண்டவர் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமாயிருந்தது. எல்லாம் நல்லதாகவே இருந்தது. பின்பு ஆதாமையும், ஏவாளையும் தேவன் சிருஷ்டித்தார். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதோ அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ அல்லது இல்லையோ என்ற தெரிந்துகெர்ளளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் ஆதாம், ஏவாளும் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டார்கள். ஆவர்கள் பாவம் செய்தார்கள். இது தேவனோடுள்ள நெருங்கிய உறவை பிரித்துவிட்டது. (அப்படியே பாவம் செய்கிற நம்மையும் பிரிக்கும்) தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். பாவிகளாயிருப்பதினாலே நாம் பாவத்தை நியாயந்தீர்க்க முடியாது. ஆகவே தேவன் அவரோடு இணைக்கப்படும்படியாக வழியை உண்டாக்கினர். தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” யோ. 3:16, பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ, கர்த்தரால் வரும் நித்திய ஜீவன் (ரோ. 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். மரித்து, மரணத்தில் ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் (ரோ. 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து சரிப்படுத்தினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் தேவனோடு உள்ள இழந்து போன அந்த உறவை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
“ஒன்றான மெய் தேவனாகி உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோ. 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தான் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஐக்கியப்பட்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். இயேசு கிறிஸ்துவை எல்லாவற்றினாலும், எல்லாவற்றோடும், நாம் கண்டிப்பாக நம்ப வேண்டும். தேவனை விசுவாசிக்கும் பொழுது பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, அவரால் நீதிமானாக்கப்படுகிறோம். நாம் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும், நாம் யாராகவும் இருக்கலாம் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம், இப்படியே தேவன் நம்மை இரட்சிக்கிறார் (ரோ. 3:22). ஆகவே வேதாகமம் கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை தெளிவாக நமக்கு போதிக்கிறது. யோ 14:6-ல் இயேசு கிறிஸ்து: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவே இரட்சிப்புக்கு வழி. ஏனென்றால் அவரே நமது பாவங்களுக்கு பரிகார பலியானார் (ரோ. 6:23). எந்தவித மதமும், பாவத்தின் ஆபத்தைக் குறித்தோ, அதின் விளைவைக் குறித்தோ இவ்வளவு ஆழமாகப் போதித்ததேயில்லை.
இயேசு கிறிஸ்து மாத்திரமே செலுத்திய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் செலுத்த இயலாது. “தேவன் மனிதனானார்” (யோ. 1:1, 14) என்பதற்கு இணையாக எந்த ஒரு மதத்தை தோற்றுவித்தவரும் எழுந்ததில்லை. ஏனெனில் இவர் மூலமாக மாத்திரமே, செலுத்த இயலாத, அந்த கடன் செலுத்தப்பட முடியும். இயேசு கிறிஸ்து பாவத்திற்கு பரிகாரபலியாக மரிப்பதற்கென்றே மனிதனானார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை, இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12).
நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
பரலோகம் செல்வதற்கு இயேசு மாத்திரம்தானா வழி?
|
|